Friday, May 8, 2009

அன்பிற்குரிய என் இனிய தமிழ் உள்ளங்களே !

அன்பிற்குரிய என் இனிய தமிழ் உள்ளங்களே ! உங்கள் அனைவரதும் சிறந்த ஆற்றல்கள் கண்டு உள்ளம் மகிழ கூடியதாய் உள்ளது. நம் தமிழின வரலாற்றில் என்றுமே இல்லாத ஓர் ஒற்றுமையை இன்று நம் தமிழர்களிடையே காணமுடிகிறது . எனது நண்பி ஒருவர் கேட்ட கேள்வி நினைவிற்கு வருகிறது , " 10 ஆண்டுகள் போராடி 3000 உயிர்களை இழந்த கொசோவோ இன்று தனிநாடு. ஆனால் அரை நூற்றாண்டுப் போர். இலட்சம் உயிர்களை இழந்த ஒரு நாட்டை தனி நாடு என அங்கீகரிக்க ஏன் தயக்கம் ?? " ஆம் இது ஒரு நல்ல கேள்வி , கொசோவோ , தமிழீழம் என்கின்றன இரண்டு தேசத்தினதும் போராட்டங்களில் சில ஒற்றுமையும் பல வேற்றுமைகளும் கண்கூடாக புரிகிறது. அனால் அங்கே அல்பாநியனுக்கு ஓர் சுதந்திர தேசம் கிடைக்கப்பெற்றது என்றால் நம் தமிழனுக்கு ஓர் தனித் தேசம் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை . ஐக்கிய நாடுகள் சபை நம்மை அங்கீகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை . நம்மிடையே பல கருத்துக்கள் இருந்தாலும் ஓர் தீர்வு கிடைக்கும் வரை , சமாதான பூமி கிடைக்கும்வரை எல்லோரும் ஒன்றிணைந்து நம்மால் முடிந்த ஆதரவை அளிப்போம் . உங்கள் அன்பன் கோபி